நீட் தேர்வு விலக்கு – இன்னும் ஒரு நாடகம்

08/04/25

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காத நிலையில், நாளை 0904 புதன்கிழமை தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்குத் தலைமை வகிக்கப் போகின்ற முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அந்தரங்க சுத்தியோடு கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்

  1. நீட் தேர்வு மசோதா நிறைவேற்றப்பட்ட பொழுது காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த, சுகாதாரத்துறை இணை அமைச்சர் திரு காந்திசெல்வன், திமு கழகத்தைச் சேர்ந்தவரா, இல்லையா?
  2. அப்படி, நீட் தேர்வு மசோதாவுக்கு ஆதரவாக அவர் நடந்து கொண்டார் எனில், அவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினாரா, இல்லையா?
  3. அப்படி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்றால், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
  4. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது நீட் விலக்கு பெறும் இரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று இளவரசர் உதயநிதி கூறினாரே! அது உண்மையா, இல்லையா?
  5. இரகசியம் தெரியும் என்று கூறிய இளவரசர் பின்னால் அந்த இரகசியத்தைக் கூறுமாறு நெருக்கிய போது, நீதிமன்றம் செல்வதுதான் அந்த இரகசியம் என்றாரே! தேர்தல் பரப்புரையின் போது இது தெரியாத அளவிற்கு அறிவில் குறைந்தவரா, உதயநிதி?
  1. நீட் தேர்வில் விலக்கு பெற கடித அட்டைகளைப் பெற்று அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் குப்பை மேடுகளில் வீசியது உண்மையா, இல்லையா?
  2. நீட் தேர்வு விலக்கு என்பது மத்திய அரசு வரம்புக்கு உட்பட்டது என்று நீங்களும் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆண்டாண்டு காலம் அரசியலில் இருந்து வரும் உங்களுக்கும் இது தெரியாமல் போனதற்கு காரணம் நீங்களும் உதயநிதியைப் போல் அறிவில் குறைந்தவரா?
  3. அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பாலகுருசாமி அவர்கள், நீட் தேர்வு பற்றி எழுதியுள்ள விளக்கமான கட்டுரைகளை நீங்கள் படித்தீர்களா, இல்லையா?
  4. இவை இத்தனைக்கும் உங்கள் மனசாட்சி அளிக்கும் பதிலை கேட்டுவிட்டு, நாளை மறுபடியும் நீட் தேர்வு விலக்கு நாடகம் நடத்தப் போகிறீர்களா?
  5. ஆம் என்றால், தமிழக மாணவர்கள் நலனை விட, மக்கள் நலனை விட வாக்கு வங்கி அரசியல் தான் தங்களுக்கு முதன்மையானது என்பது உண்மையா, இல்லையா?

காமராஜர் மக்கள் கட்சி எழுப்பியுள்ள இந்த வினாக்களைப் புரிந்து கொள்வீர்கள்; பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறோம்.

பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *