கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தும் திட்டம் எப்போது?
காரைக்காலை கடந்து செல்லும் வெளியூர் பயணிகள் காரைக்காலில் மகிழ்வுடன் நேரத்தை செலவிட்டு செல்லும் வகையில் கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டது
அதில் ஏற்படுத்தப்பட்ட சீகல்ஸ் பின்புறம் உள்ள பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் வீணாகிறது.


ஏழை,நடுத்தர மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்த “கடற்கரை பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் செயல் இழந்து கொசு உற்பத்தி கேந்திரமாக திகழ்கிறது.
சுத்தமான காற்றை சுவாசிக்க அழைத்துவரப்படும் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் இடம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. 75வது சுதந்திர தின நினைவு சின்னம் உடைந்து விழும் நிலையில் முட்டுக்கொடுக்கப்பட்ட மூங்கில் கம்புகளுக்கிடையே உள்ளது.



கடற்கரை பூங்கா தலைவாயில் வளைவு விழுந்து விடுமோ என்று கடற்கரை பூங்கா பெயர் பலகை இரும்பு குழாய்களை வைத்து முட்டு கொடுத்து இருக்கிறார்கள்! பூங்காவை சுற்றி உள்ள இரும்பு கிரில்கள் பெரும்பாலும் சாய்ந்த நிலையில் உள்ளது! குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து செல்ல மக்கள் பயப்படும் நிலை உள்ளது! மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.


