காரைக்காலில் சிரமப்படும் பொதுமக்கள்
15/05/2025
காரைக்காலில் டாக்டர் கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை மேம்பா.லத்தில் எரியாத மின்வி ளக்குகளை எரிய விட ‘ வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத் துள்ளனர்.
மேம்பால விளக்குகள் காரைக்கால் புதிய பஸ் நிலையம் எதிரே டாக்டர் கலைஞர் கருணாநிதி புறவ ழிச்சாலை உள்ளது. இங்கு போதுமான மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் சமூகவிரோதிகள் மற்றும் திருநங்கைகளின் தொல்லை / அதிகரித்து வருவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஆண்டு இப்பகுதியில் ஏராள மான மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து, அப்பகுதியில் காரைக்கால்-பேரளம் இடையே ரெயில்வே போக் குவரத்து வந்ததால் மேம்பா லம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் பணி முடிந்து அப்பகுதியில் போதுமான மின்விளக்குகள் அமைக்கப் பட்டு பல வாரம் ஆகியும் இதுவரை எரியவில்லை.
பொதுமக்கள் சிரமம்இதனால் மேம்பாலத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, ஞாயிற்றுக்கிழமை தோறும் இயங்கும் வார சந்தையும், பஸ் நிலையத்தில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், மேல காசாகுடி நெடுங் காடு செல்லும் மிக முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து பகுதியாக இருப்பதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்வி ளக்குகளை உடனடியாக எரிய விட வேண்டும் என பொதுமக்கள் சார்பாக காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது .

ஏ.எம்.இஸ்மாயில்,பொதுச்செயலாளர்
காமராஜர் மக்கள் கட்சி, காரைக்கால் மாவட்டம்