காரைக்காலில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் நிறுத்தம் ஏன்?
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்(JNNURM) என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு பெரிய நகர மேம்பாட்டு திட்டம். இது மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியாகும். இதில் மலிவு விலையில் வீட்டுவசதி, நகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்குதல் முக்கிய பங்கு உள்ளது . இத்திட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் சிங்கார வேலவர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது.

அதில் ஒரு பகுதி பயனாளிகளின் பயன்பாட்டுக்கு கொடுக்காமல் ஏழு ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது.
ஓர் ஆண்டுக்கு முன்பு மாவட்ட தேர்வு குழுவால் வீடுகளை பெறும் பயனாளிகளின் பெயர் பட்டியல் உரிய விதிகளின் படி தயாரிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அறிவிப்பு செய்து அரசு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.
பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய காலக்கெடுவில் திடீரென நிறுத்தப்பட்டது.

இன்று வரை பயனாளிகளுக்கு கொடுக்கப்படாமல் பாழடைந்து வருகிறது. அக்கட்டிடத்தில் தெரு நாய்களும், ஆடு,மாடுகளும் குடியேறி வருகிறது!
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி பொதுமக்கள் சார்பாக வேண்டுக்கோள் வைக்கிறது .

ஏ.எம்.இஸ்மாயில்,பொதுச்செயலாளர்
காமராஜர் மக்கள் கட்சி, காரைக்கால் மாவட்டம்