காரைக்கால் சாலை பணிகளை விரைந்து முடித்து, ஆபத்துக்களை தடுக்க கோரிக்கை வைக்கிறது காமராஜர் மக்கள் கட்சி
7/05/2025
காரைக்கால் காமராஜர் சாலை மையப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத ஒரு பகுதியாக கடந்த ஓர் ஆண்டு காலமாக இருந்து வருகிறது.
இச்சாலையில் கனரக வாகனம் முதல் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் சைக்கிள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. சாலை படுமோசமாக இருப்பதால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுகின்ற நிலை தினம்தினம் நடைபெறுகிறது.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அப்பகுதியில் மரண பயத்துடன் வாகனங்களில் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை.குண்டும் குழியுமாக உள்ள பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல், சாலை ஓரத்தில் கழிவுநீர் பாதை அமைத்து, சாலையை மேம்படுத்தும் பணி பொதுப்பணி துறை சார்பாக துவங்கப்பட்டு ஓர் ஆண்டை கடந்த நிலையில் 50%சதவீதம் கூட நிறைவேறாமல் ஆமை வேகத்தில் நடைப்பெற்று வருகிறது.

காரைக்கால்- பேரளம் இருப்பு பாதை அமைக்கும் பணி அப்பகுதியில் ஓர் ஆண்டுக்கு மேலாக மந்தகதியில் நடந்து வருகிறது! அப்பகுதியான சிங்கார வேலவர் சாலை, காமராஜர் சாலை படுமோசமாக இருப்பதால் தினம் தினம் விபத்து! போக்குவரத்து இடையூறு, அச்சாலையை பயனபடுத்தும் பொதுமக்களுக்கு தினம் தினம் தொல்லை ஏற்படுகிறது.
காரைமாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு அப்பகுதியில் நடைபெறும் இருபணிகளையும் விரைந்து முடிக்க துரிதப்படுத்த காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.
