காரைக்கால் மாவட்ட அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை நவீனப்படுத்த காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஏஎம். இஸ்மாயில் கோரிக்கை
19/05/2025
காரைக்கால் மாவட்ட அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை நவீனப்படுத்த வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஏஎம். இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எடிட்டர் ஏ ம்.இஸ்மாயில் இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் புதுச்சேரி அரசுக்கு வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம், தபால் நிலைய அலுவலகத்தின் ৪৫ பகுதியில் துவங்கப்பட்டது. இந்த 7 ஆண்டுகளில் எவ்வித விரிவாக்கமும் இல்லாமல் அந்த சிறிய பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். துணைக்கு செல்பவர்கள் வாசலிலேயே நிற்க வேண்டும். அங்கு அமருவதற்கு எவ்வித வசதியும் கிடையாது. குடிநீர் வசதிக்கூட கிடையாது அலுவலகத்திற்கான பெயர் பலகை கூட இல்லாத அவல நிலை. அலுவலகம் உள்ளே செல்லப் பல தடைகளை கடந்து செல்ல வேண்டும். அஞ்சலக அலுவலகம் வருபவர்கள் வாகனங்களை நிறுத்தி செல்வதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வாகன நிறுத்தம் இருக்கும் இடத்தை குறிக்கும் பெயர் பலகையும் கிடையாது.
ஒரு காலத்தில் அரசியல் நிர்வாகத்திற்காக காரைக்கால் தஞ்சை ஜில்லாவுடன் இணைத்து இருந்த அதன் தாக்கமோ என்னவோ. பொதுமருத்துவமனைக்கு சென்றால், இங்கு ஒரு வசதியும் கிடையாது மேல் சிகிச்சைக்கு தஞ்சைக்கு அனுப்புகிறார்கள், பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பெரும்பாலானவர்களை த ஞ் சைக்கே அனுப்புகிறார்கள். கேட்டால்” உயர் அதிகாரி பாதை முழுவதும் இங்கு இல்லை என்பது பதிலாக இருக்கிறது. என வே அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், “அஞ் சலக பாஸ்போர்ட் சேவை மையம் பெயர் பலகை வைக்க வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் அலுவலகம் செல்ல வழிவசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். துணைக்கு வருபவர்கள் வெளியில் அமருவதற்கு வசதியும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எம்.இஸ்மாயில், பொதுச்செயலாளர்
காமராஜர் மக்கள் கட்சி,காரைக்கால் மாவட்டம்