சந்தை திடலை சுற்றி குப்பைகள் மலைப்போல் தேங்கி கிடக்கின்றன ! காரை நகராட்சி கவனிக்குமா?
1/05/2025
காரைக்கால் வாரசந்தையை சரிவர சுத்தம் செய்வதில்லை என்ற புகார் அதிகமாக உள்ளது. வாடகையை மட்டும் சரியாக வாங்கி செல்கிறார்கள் வியாபாரிகளுக்கு அத்தியாவசிய வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பது இல்லை!

வாரச் சந்தையில் வரி வசூல் செய்யப்படுகிறது ஆனால் சந்தை பகுதிகளில் தேவையற்ற கழிவுகளை அகற்றப்படாமலும் குப்பைமேடுகளாக காட்சியளித்தும் இதனால் நாய் தொல்லை அதிகமாகிறது மேலும் கழிவு துர்நாற்றம் வீசுகிறது சந்தை பகுதிகளுக்கு வருபவர்களின் நிலை மிகவும் மோசமாகவும் பயமுறுத்தும் வகையிலும் அந்த பகுதி அமைந்துள்ளது எனவே இது போன்ற சீர்கேடுகளை சரி செய்து போக்குவரத்துக்கும் மக்கள் அச்சுறுத்தல் இல்லாமல் நடை பயணம் செய்வதற்கும் வழிவகை செய்ய காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
