திருப்பூரில் தொடர்ந்து 6ம் ஆண்டாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு
காமராசர் மக்கள் கட்சியின் நிறுவனர் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் ஆணைக்கு இணங்க நமது பொது செயலாளர் குமரையா வழிகாட்டுதலுடன் திருப்பூரில் தொடர்ந்து 6ம் ஆண்டாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு இனிதே தொடங்கப்பட்டது
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் C.R ராஜேந்திரன் தலைமையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் க சுரேஷ்குமார் முன்னிலையில் நமது இயக்கத்தின்பாலும் அய்யாவின் மீதும் பற்றுகொண்ட சமூக ஆர்வளர் சிகரம் பவுண்டேசன் நிர்வாகி TIMES DYING விஜயகுமார் அண்ணன் அவர்கள் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து தாகம் தனிக்க வந்த பொதுமக்களுக்கு தனது திருக்கரத்தால் நீர்மோர் வழங்கி தொடங்கி வைத்தது இன்றைய நாளின் தனிச்சிறப்பு.உடன் திரு KVT வெள்ளியங்கிரி ,குரவேல் சேகர்,சுதாகர்,சக்கிவேல், 49 வது வார்டு WORK SHOPE செல்வராஜ், உள்ளிட்ட நமது நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்றும் மக்கள் பணியில் காமராஜர் மக்கள் கட்சி திருப்பூர் மாவட்டம்.
