பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் சாலைகளில் வீணாகிறது
மாநில அரசு நீர்நிலைகளை பாதுக்காக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. குளங்கள் முறையாக தூர் வாரப்படுமானால் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு நீரைக்கொடுத்து, நன்கு நீரை தேக்கிவைத்துக்கொள்ளும்.
தூர் வாரப்படாத குளங்களால் எந்த பயனும் இல்லை. 2030ல் நாட்டின் குடிநீர் தேவை 2மடங்கு அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. பல நகரங்களில் கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
குடிநீர் விரயம் என்பது நமது ஊரில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. பொதுப்பணி துறை குடிநீர் பிரிவில் உள்ள அதிகாரிகள்,ஊழியர்களுக்கு அவசியமாக தெரியவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக தண்ணீர் விரயம் ஆகிறது! இதை கவனிப்பதுடன், தெருவாரியாக ஊழியர்கள் சென்று பார்க்க வேண்டும்.
இது போல பல தெருக்களில் தண்ணீர் விரயம் ஆகி கொண்டு இருக்கிறது.பொதுப்பணி துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.

இஸ்மாயில் , பொதுச் செயலாளர் -காமராஜர் மக்கள் கட்சி , காரைக்கால்