பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி திறக்காமல் காலம் கடத்தும் மாநில அரசு
18/05/2025
ராஜாத்தி நகர் குடிநீர் தேக்க தொட்டி பணி 2018 ஜனவரி மாதம் தொடங்கியது.அப்பொழுது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் “தீவிரமாக பணிகளை முடித்து 9மாதத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு கொடுத்து விடுவோம் என உறுதியளித்தார்கள்.
வெற்றிகரமாக 90மாதம் ஆகிறது, இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தபாடு இல்லை.மார்ச் மாதம் நிச்சயமாக பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றார்கள் மார்ச் முடிந்து இரண்டுமாதங்கள் ஆகிறது அதே நிலைதான் தொடர்கிறது.
5, 6 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் பல இடங்களில் பல மாதங்கள் பாதுகாப்பற்ற முறையில் திறந்தே கிடந்தது. அதனால் பல இடங்களில் மண் மற்றும் அசுத்தங்களால் அடைப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு. பாக்டீரியாக்கள், மற்றும் பிற அசுத்தங்கள் இருக்கலாம்! அதனால் குழாயிலிருந்து வரும் தண்ணீரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகே மக்களின் பொதுபயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டுகிறோம்.
