சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு.அருளானந்து அவர்களின் தலைமையில் மக்கள் பணி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணவேணி கார்டன் பிரிவில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டி மற்றும் புதிய சாலை அமைக்க வேண்டி மனு. காரைக்குடி நகராட்சி வ.உ.சி பள்ளி அருகில் டாஸ்மார்க் கடை இருப்பதால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், பெண்களுக்கும் ,பெரும் தொந்தரவு இருப்பதால் டாஸ்மார்க் கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி கடைகளை திறக்க கோரி காமராஜர் மக்கள் கட்சி மூலம் கோரிக்கை மனு விடுக்கப்பட்டது.