காரைக்காலில் முறையான வடிகால் வாய்க்கால் அமைக்காததால் வீடுகளில் தண்ணீர் தேக்கம்
26/01/2025
காரைக்கால் வ உ சி புறவழிச்சாலை (பை-பாஸ் சாலை) வடிவாய்க்கால்கள் ஆக்கிரமித்து உள்ளதாலும், மற்ற வாய்க்கால்கள் சரிவர தூர்வாராத காரணத்தாலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிய முடியாமல் தேங்கி நிற்கிறது.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் நகர பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும், அதிகாரிகளின் உதவியோடு ஆக்கிரமிப்பு செய்துள்ள வடிவாய்க்கால்களை மீட்க மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.




