மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிட மாடல் சாதனையா? இந்திய தேசியக் காங்கிரசை உருவாக்கிய வெள்ளையர்களில் ஒருவரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம், மதுவினால் வரக்கூடிய அரசின் வருவாய் ‘பாவத்தின் சம்பளம்’ என்று குறிப்பிட்டார். வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மதுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற வெள்ளையர்கள் கூட, மது விற்பனை மூலம் வரும் அரசின் வருமானம் பாவத்தின் சம்பளம் என்று வர்ணித்து இருப்பது நம் சிந்தனைக்குரியது. 1937 இல் இராஜாஜி ஆட்சி அமைந்த போது, முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் அவர் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்த போது சேலம் மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கினால் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெற்று இருப்பதாகவும் அனுப்பி வைத்த குறிப்பை இராஜாஜி பதிவு செய்தார். 1937 முதல் 1972 வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள், மதுவின் வாசனையையே அறியாத மாநிலமாகத் தமிழகம் இருந்தது. அரசு வருவாயைப் பெருக்குவதற்காக கள்ளுக் கடைகளைத் திறந்து தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய மனிதர் தான் கலைஞர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.
Read more